எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்; இந்த சந்திப்பில் நடந்தது என்ன..?
Nainar Nagendran and Union Minister of State L. Murugan met Edappadi Palaniswami
தமிழா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மணிலா தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சுமார் 1.15 மணி நேரம் இவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்தடுத்த பணிகளை முன்னெடுத்துவரும் வகையில், என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜக இணைந்த பின் ஏற்கனவே பிரிந்துச் சென்ற கட்சிகளும் கூட்டணிக்குள் வந்துள்ளன.

இதனையடுத்து, மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு சேர்ந்து, என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மேலும், தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையபோகிறது எனும் கேள்வி தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் ஒன்றாக பங்கேற்றிருந்தனர். அங்கு அவர்கள் சுமார் 20 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் மார்ச் 01 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடுக்கு வருகை தர உள்ளார். அதற்குள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் இன்றைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரின் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், பிரதமர் வருகையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள், கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தல் பணியில் அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டியது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடத்ததாக தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran and Union Minister of State L. Murugan met Edappadi Palaniswami