‘தை’ முடிந்துவிட்டது அடுத்த நிலைப்பாடு என்ற கேள்விக்கு ''பொறுமையாக இருங்கள்'' என்று பதிலளித்துள்ள ஓ. பன்னீர்செல்வம்..!
O Panneerselvam has responded to the question of what the next stand is Be patient
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக மீண்டும் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், அவரின், நிலைப்பாடு குறித்து கடந்த காலத்தில் கேள்வி எழுப்பியபோது, ‘தை’ மாதம் முடியும் போது பதிலளிப்பதாக பதிலளித்து வந்தார்.
இந்நிலையில், தை முடிந்து மாசி மாதம் பிறந்த நிலையில், இன்று மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள், 'தை முடிந்து மாசி பிறந்து விட்டது என கேள்வி எழுப்பினர். அதற்கு “பொறுமையாக இருங்கள்” என பதில் அளித்த்து சென்றுள்ளார்.

அத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, ''அப்படியா'' எனக் கேட்டதோடு, பட்ஜெட் தாக்கல் குறித்தான கேள்விக்கு ''பட்ஜெட் வந்த பிறகு தான் தெரியும்'' என பதிலளித்துள்ளார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை முன்பணம் கோடைக்கால நிதி என ஆளும் திமுக அரசு, கலைஞர் உரிமை தொகை என மகளிருக்கு ரூ. 5,000 கொடுக்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ''மகளிர்க்கு 5000 ரூபாய் கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
O Panneerselvam has responded to the question of what the next stand is Be patient