கிழக்கு கடற்கரை சாலையை 06 வழி மேல்மட்ட சாலை டெண்டர் வழக்கு : தமிழக அரசு சென்னை உயர் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கிழக்கு கடற்கரை சாலையை 06 வழி மேல்மட்ட சாலை பணிக்கான டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு மீது முடிவெடுக்கும் வரை, பணிகள் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையை 06 வழி சாலையாக மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது.

இந்த தொழில்நுட்ப டெண்டர் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போபாலை சேர்ந்த திலீப் பில்ட்கான் என்ற நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதன்படி, டெண்டர் இறுதி செய்யும் முன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திலீப் பில்ட்கான் நிறுவனம் மேல்முறையீட்டு செய்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் குறிப்பிடுகையில், உள்நோக்கத்துடன் தங்கள் டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்காக கூறிய காரணங்கள் தன்னிச்சையானவை என கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசுத்தரப்பில், தெரிவிக்கையில், டெண்டர் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு மீது 10 நாட்களில் முடிவெடுக்கப்படும். அதுவரை ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஒப்பந்தப்பணி வழங்கப்பட மாட்டாது என உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டு, பதிவு செய்துகொண்ட  நீதிபதிகள், டெண்டர் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து 05 நாட்களில் அரசுக்கு மேல்முறையீடு செய்ய மனுதாரர் நிறுவனத்துக்கு அனுமதியளித்தனர். குறித்த மேல்முறையீடு மீது 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதுவரை ஒப்பந்த பணிகளை வழங்கக் கூடாது எனவும் தமிழக  அரசுக்கு உத்தரவிட்டு, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government orders action in Chennai High Court in 6 lane elevated road tender case for East Coast Road


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->