த.வெ.க அரசு ஒரு அரசியல் பேரிடர்...சோபா வந்ததும் சிலர் ஓடிட்டாங்க...! - தவெக-வை வறுத்தெடுத்து உதயநிதி ஸ்டாலின் அதிரடி அட்டாக்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதோடு, தி.மு.க. மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் உறவு குறித்து கருத்து தெரிவித்து அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா குடும்பத் திருமண விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திய பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், "இந்த நிகழ்வில் இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளமானோர் பங்கேற்றிருப்பதை காண முடிகிறது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களையும், சூழ்நிலைகளையும் அனைவரும் கவனித்து வருகிறீர்கள். சிலர் சோபா வந்தவுடன் தி.மு.க.வை விட்டு விலகிச் சென்றிருக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் உறுதியுடன் தி.மு.க.வுடன் தொடர்ந்து நிற்பதை இந்தக் கூட்டம் வெளிப்படுத்துகிறது" என்றார்.

மேலும், "இஸ்லாமிய மக்களுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேயான உறவு அரசியலைத் தாண்டிய நம்பிக்கையின் உறவாகும். அந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது.

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், எத்தகைய அவதூறுகள் பரப்பப்பட்டாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் தி.மு.க. எப்போதும் உறுதியான பாதுகாப்பு அரணாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்த அவர், "தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்று கொண்டிருந்தாலும், அவற்றை உரிய முறையில் கவனிக்காத அரசாக த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போதைய அரசியல் சூழல் தமிழகத்திற்கு அரசியல் பேரிடராக மாறியுள்ளது. அந்த பேரிடர் நிலைமையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பொறுப்பை தி.மு.க. ஏற்கும்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk government political disaster some people ran away when sofa came Udhayanidhi Stalin attacks tvk


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->