'கோயபல்ஸ்' பிரச்சாரச் செய்திகளில் துளியும் உண்மையில்லை - கொந்தளிக்கும் தவெக! - Seithipunal
Seithipunal


தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், "மீண்டும் தெளிவாக்குகிறோம். எத்தனை முறை திருப்பி திருப்பி சொன்னாலும் பொய் ஒருபோதும் உண்மை ஆகாது. தமிழக வெற்றிக் கழகத்தைப் பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி, முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் உட்படச் சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் 'கோயபல்ஸ்' பிரச்சாரச் செய்திகளில் துளியும் உண்மையில்லை.

பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக்கொள்ளவும், அரசியல் உள்நோக்கத்துடனும் பரப்பி வரும் இத்தகைய செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைத்தன்மையற்றவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். எவ்விதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளும் நடைபெறாத நிலையில், இச்செய்திகள் முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்டவை.

சிலர் தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப அரசியல் சூழலைக் கணிப்பதாக நினைத்துக்கொண்டு, ஒரு திரைப்படத்திற்கு 'கதை, திரைக்கதை, வசனம்' எழுதுவது போலக் கற்பனையான செய்திகளை உருவாக்கி வருகிறார்கள். இத்தகைய செய்திகள் அவர்களின் தனிப்பட்ட கற்பனைத் திறனைப் பறைசாற்றுகிறதே தவிர, இதில் எள்ளளவும் உண்மையில்லை. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னதான் முயன்றாலும், தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முடியாது.

காரணம், இன்று தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு, வரும் தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காணும் அளவிற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இன்று தமிழகத்தின் எந்தத் திசையில் திரும்பினாலும் மக்களின் உற்சாகமான 'விசில் சத்தம்' மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. இது வெறும் சத்தம் அல்ல, 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான உண்மையான சாட்சி.

எனவே, ஆதாரமற்ற, அதிகாரப்பூர்வமற்ற மற்றும் உள்நோக்கத்துடன் செய்திகளாகப் பரப்பப்படும் வதந்திகளையும், யூகங்களையும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk condemn to fake news alliance issue


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->