என் உயிருக்கு ஆபத்து - காவல் நிலையம் ஓடிய ஆதவ் அர்ஜுனா!
TVK Aadhav Arjuna police complaint
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இருந்து காவல்துறையில் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், அலுவலகம் அருகே சில அறிமுகமற்ற நபர்கள் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்ததாகவும், தனது மற்றும் அலுவலக பணியாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் புகாரை பதிவு செய்து, அந்த பகுதியின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
TVK Aadhav Arjuna police complaint