அதிரடி திருப்பம்: விஜய் ஆட்சிக்கு ஆதரவு... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னணி நிர்வாகிகள் போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, கட்சியின் தற்போதைய தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, திமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்புவதாகக் கூறி, நிர்வாகிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

திமுகவை எதிர்ப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு இயக்கம், அதே கட்சியுடன் கைகோர்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு தங்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதிமுக எந்தக் காலத்திலும் உடையக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தொடர் தோல்விகள் காரணமாகவே இந்த முக்கிய முடிவை எடுக்க நேரிட்டதாகத் தெரிவித்த நிர்வாகிகள், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினர்.

மேலும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் ஒரு முக்கிய குண்டைத் தூக்கிப் போட்டனர்.

இந்த இக்கட்டான சூழலில், உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Turmoil in AIADMK Senior Leaders Revolt Against Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->