உடைந்தது கூட்டணி! அமமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய முக்கிய கட்சி! - Seithipunal
Seithipunal


டிடிவி உடன் கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி, தற்போது திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தனித்து போட்டியிடும் அமமுக சார்பாக சிவபிரசாந்த் களமிறக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த தேர்தலில் அமமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி தற்போது திமுக கூட்டணிக்கு தவியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன், இன்று எஸ்டிபிஐ நிர்வாகிகளுடன் சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்க கோரினார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ நிர்வாகிகள், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTVDhinakaran evkselangovan Erode East By Election SDPI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->