இன்று காலை வெளியான செய்தி., பெரும் கவலையில் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

சிங்களக் கடற்படை செய்துள்ள இந்த அராஜக செயலுக்கு பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன..

அந்த வகையில், இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில், "ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் படகுகளுடன் சிறைபிடித்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கவலையளிக்கிறது. 

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலை மத்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும். 

இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Tamil Fisher man arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->