அடுத்தடுத்து நடக்கும் மரணங்கள் - அதிர்ச்சியில் டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal



சேலம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43 வது தற்கொலை சம்பவம் இது. மேலும், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவருவதற்கு பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும், விளக்கம் கொடுத்த பின்னும் பலமாதங்களாக சட்டங்கள் கிடப்பில் போட்டிருப்பதுமாக நடவடிக்கைகள் உள்ளன. 

இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran say about Online gambling 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->