டிடிவி தினகரனை சந்திக்கும் சசிகலா.! பிரமாண்ட ஏற்பாடு.! தொண்டர்கள் வாழ்த்து மழை.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதில் சசிகலா கலந்துகொள்ள இருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் - ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் அவர்களுக்கும், டிடிவி தினகரன். அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணிக்கும் நாளை திருவண்ணாமலையில் திருமணம் நடக்கிறது.

இன்று மாலை 6.50 மணி முதல் 7.50 மணி வரை திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. 

இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஓட்டலில் இருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடக்கிறது.

இதனை தொடர்ந்து நாளை காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவில் சசிகலா மற்றும் உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன், சிவக்குமார், வெங்கடேஷ் மற்றும் அமமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருமண விழாவையொட்டி திருவண்ணாமலை நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dhinakaran daughter marriage function


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->