பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு. டிடிவி தினகரன் வீட்டில் டும்.,டும்.,டும்.,!
TTV Dhinakaran daughter marriage
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நம் வீட்டு மணமக்களை நலம் சூழ வாழ்த்துங்கள்! நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு...
அரசியல் இயக்கம் என்பதைத் தாண்டி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் என்ற பந்தத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாசப்பிணைப்பு நமக்குள் எப்போதும் இருக்கிறது.

என் மீது நீங்கள் காட்டுகிற அளவிடமுடியாத அன்பும், உங்கள் மீது எனக்குள்ள அசைக்க முடியாத பற்றுமே அதற்கான சாட்சி. அத்தகைய கழகம் என்னும் நம்முடைய அன்புக்குடும்பத்தின் மகிழ்ச்சி விழாவாக, என் அன்பு மகள் ஜெயஹரிணி அவர்களுக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் திருநிறைச்செல்வன்.K. ராமநாத துளசி அய்யா வாண்டையார் அவர்களுக்கும் வருகிற 16.09.2021 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தாங்கள் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து திருமணத்தை நடத்திட வேண்டும் என்பதே எனது பெரும் விருப்பம். எனினும் கொரோனா பேரிடர் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால், இல்லறம் ஏற்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட தங்களின் மனப்பூர்வமான அன்பையும், இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சூழல் மாறியவுடன் நல்விருந்து ஒன்றில் நாம் சந்திப்போம்.
அன்புள்ள டிடிவி தினகரன்.
English Summary
TTV Dhinakaran daughter marriage