இன்னும் தயக்கம் ஏன்? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
TTV Dhinakaran Condemn To DMK MLA SR Raja
தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா மறைமலைநகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் புகுந்து, நிறுவன ஊழியர்களை அடித்து காலை உடைப்பேன், நிறுவனத்தை இழுத்து மூடி விடுவேன் என்று மிரட்டும் காணொளி சமூகவலைத்தளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது.

தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran Condemn To DMK MLA SR Raja