டன்னுக்கு ரூ.3,151! கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்த தமிழ்நாடு அரசு!
TN Government sugarcane
தமிழ்நாடு அரசு 2024-25 பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 9.50 சதவீதம் அல்லது அதற்கு குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்பின் விலை ரூ.3,151 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
9.85 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,267, 10.10 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,344.20, 10.65 சதவீத சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ரூ.3,532.80 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த பருவத்திற்கு கரும்பு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள், மற்றும் அரசியல் கட்சிகள் ஏற்று கொள்வார்களாக என்பது இனிமேல் தான் தெரியவரும்.
கரும்பு விவசாயிகள், கரும்பின் பயிர்ச் செலவு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர்.