அம்பானியின் தலைமை நிதி அதிகாரியை கைது செய்த அமலாக்கத்துறை!
Anil Ambani CBI Raid money laundering ED arrest
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை இல்லம் மற்றும் அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக, அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அவரை மும்பையில் கைது செய்தனர்.
பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவுகளின் கீழ் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசோக் குமார் பால் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. வங்கி கடன்களை தவறாக பயன்படுத்தியதற்கான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் இந்த கைது நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய பல நிதி நிறுவனங்கள் மீது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ED மற்றும் CBI இரு அமைப்புகளும் இணைந்து பணமோசடி, கடன் தவறுகள், மற்றும் வெளிநாட்டு நிதி பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து வருகின்றன.
அசோக் குமார் பால் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Anil Ambani CBI Raid money laundering ED arrest