INDvWI ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை மிஸ் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வா! - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. 

ஜெய்ஸ்வால் சிறப்பான சதம் அடித்தார்; தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 87 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னுடனும் ஆட்டம்விடாமல் இருந்தனர்.

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இருவரும் தன்னம்பிக்கையுடன் விளையாடினர். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 

1 ரன்னுக்கான ஓட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு அவர் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் தனது இன்னிங்சை அமைத்தார்.


 

அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பும் இருந்தது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஜெய்ஸ்வால் வெளியேறிய பின் சுப்மன் கில்லுடன் நிதிஷ் குமார் ரெட்டி இணைந்தார். நிதானமாக ஆட்டத்தை முன்னெடுத்த இந்த ஜோடி இந்திய அணியின் நிலையை உறுதியாக்கினர்.

96.1 ஓவரில் இந்திய அணி 350 ரன்னைக் கடந்தது. ஜெய்ஸ்வாலின் அதிரடி இன்னிங்சும், சாய் சுதர்ஷனின் நம்பிக்கையூட்டும் ஆட்டமும் இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தன.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDvWI Yashasvi Jaiswal 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->