சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேர் அமெரிக்காவில் கைது..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கனரக வாகனங்களை இயக்கிய போது சில விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆபரேஷன் ஹைவே சென்டினல்' நடத்தப்பட்டது. 

அத்துடன், சட்டபூர்வமான குடியுரிமை இல்லாத நிலையிலும், சில மாகாணங்கள் இவர்களுக்கு வர்த்தக ரீதியான டிரைவிங் உரிமங்களை வழங்கியுள்ளது குறித்தும் தெரிய வந்துள்ளது.  அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 12 வரையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது 49 பேர் பிடிப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''அமெரிக்காவில் சிலர் சட்டவிரோதமாக இருந்துகொண்டு டிரைவர் உரிமம் பெற்று சரக்கு லாரி இயக்குகின்றனர். கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கையில் மட்டும் , சட்ட விரோதமாக குடியேறி லாரி இயக்கி வந்த

இந்தியர்கள் 30 பேர் உட்பட 49 பேரை கண்டறிந்து கைது செய்துள்ளோம். இந்த சோதனையில் இந்தியா தவிர சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். 

2025-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிலிருந்து 3,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவிற்குத் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.'' என்று அந்த றிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

49 people including 30 Indians who were staying illegally, have been arrested in the United States


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->