பெண் விடுதலை வேஷம், சாதி ஒழிப்பு, மது ஒழிப்பு நாடகம்; ஈவெராவை கடுமையாக விமர்சித்த இஸ்லாமிய பெண்..!
An Islamic woman from the Naam Tamilar party who severely criticized Periyar
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் போது, ஈ.வெ.ரா குறித்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. தாரிகா சல்மான் என்ற குறித்த பெண் பேசியதாவது:
என் மண்ணில் வந்து பெண் அடிமையை சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. வேலு நாச்சியார், வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டையிட்டார். அவர் காலத்தில் பெண் அடிமையை யார் உடைத்தது..? யார் பெண்களுக்கு தைரியத்தை கொடுத்தது..? அவர் கையில் வாளை கொடுத்து சென்று, வென்று வா என வேலு நாச்சியாரை ஈ.வெ.ரா அனுப்பி வைத்தாரா..? அவர் இறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே ஈவெரா பிறந்தார் என்று பேசியுள்ளார்.
அத்துடன், அடிமை சங்கிலியை அறுப்பதாக போராட்டம் நடத்தி, பெரியார் கும்பல் அடுத்தவர்கள் பொண்டாட்டியின் தாலிகளை எல்லாம் அறுத்தார்கள் ஆனால், அவர்கள் வீட்டு பெண்களின் கழுத்தில் 20 பவுனில் தாலி தொங்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, பெரியார் கொள்கையின் படி, கருப்பையை அறுத்து எறி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஈவெராவின் அம்மா அதை செய்திருந்தால் ஈவெரா எனும் தலைவலியே இருந்திருக்காது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈவெராவின் சிஷ்யர் கருணாநிதி தன் மனைவி, துணைவிக்கு இதனை சொல்லியிருந்தால், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என எந்த தலைவலியும் இருந்திருக்காது என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வெளுத்து வாங்கியுள்ளார்.
பெண்களை ஆண்கள் போல முடி வெட்டுங்கள், உடை அணியுங்கள், ஆண்கள் போல் இருக்க வேண்டும் என ஈவெரா சொன்னதன் விளைவே இப்போது லெஸ்பியன், எல்.ஜி.பி.டி.க்யூ வரை நின்றிருக்கிறது என்று மேடையில் அவர் பேசுதாவை அங்கிருந்தவர்கள் ஆரவாரமாக ரசித்தனர். அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து எதற்கு என கேட்டார். தமிழ்த்தாயை வாழ்த்தாமல் மணியம்மையையா வாழ்த்துவது..? என்று விமர்சித்துள்ளார். உலகத்தமிழ் மாநாடும், கும்பகோணம் மகாமகமும் ஒன்று என சொன்னவர் ஈவெரா. ஜாதிக் கொடுமைக்கு எதிரானவர் என்ற ஈவெரா, ஜாதியை ஒழிக்க என்ன செய்தார்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் அவரின் (பெரியார்) விடுதலை பத்திரிகையில், பறையனும் சூத்திரனும் ஒன்றா என எழுதியுள்ளார். அதாவது, சூத்திரன் என்பவர் இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத ஆதித்திராவிடர் அல்லாத, மீதி திராவிடர்களே சூத்திரர்கள் என்கிறார். அப்படியெனில் அவர் சமூகத்தை சேர்ந்தவர்களையே சூத்திரர் என்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காமராஜர் கருப்பாக இருப்பதையும் ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் தெரியுமா...? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்பெல்லாம் எருமை மாட்டு தோலைத்தான் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வார்கள், ஆனால், இப்போது எருமை மாடே ரஷ்யா செல்கிறது என்று பேசினார் ஈவெரா. இவர் ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க போராடினாரா? என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஈவெரா, காங்கிரசுடன் இருக்கும் வரை மது ஒழிப்பு பற்றி பேசிவிட்டு, தனி திராவிட இயக்கம் தொடங்கியதும், மது ஒழிப்பு ஒரு முட்டாள்தனம், கலவியை எப்படி கூடாது என சொல்ல முடியாதோ அதுபோல மது குடிப்போரையும் கூடாது என சொல்ல முடியாது என பேசியவர். மதுவை ஒழித்தால் ஆண்டுக்கு 20 கோடி வருவாயை அரசு இழக்கும் என்று பேசிய ஈவெரா, எந்த போதைக்கு அடிமையானவர்? என்று சரமாரியாக பேசியுள்ளார்.

அதேநேரத்தில் தாரிகா சல்மான் பெரியார் பற்றியும் பேசியுள்ளார். அதாவது, பெண்களுக்கு விடுதலை இல்லையெனில் இந்த மண்ணில் இருந்து என்ன பயன் என்றும் இந்த மண்ணில் இருக்கும் அனைத்தும் தெய்வம், என் மனைவியும் தெய்வம் என்றும் சொன்னவர் பாரதியார் என்று பாரதியின் பெருமையையும் பேசியுள்ளார்.
பாரதியாரை பார்ப்பான் என விமர்சித்த ஈவெரா, கட்டுன பொண்டாட்டிய ஊருக்கு புதுசா வந்திருக்கிற தாசி என அறிமுகப்படுத்துகிறார். அவர் மனைவி நாகம்மை இறந்தபோது கூட, நான் ஒரு அடிமையை இழந்து விட்டேன் என்று சொன்னார். பெண் விடுதலை என்பது பிறருக்கு தான், தன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தாரிகா சல்மான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதேவேளை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல இடங்களில் தாரிகா சல்மான் பேச்சை கை தட்டி வரவேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
English Summary
An Islamic woman from the Naam Tamilar party who severely criticized Periyar