48 மணி நேரத்தில் ரூ.10 உயர்ந்த வெள்ளி விலை! விண்ணை முட்டும் தங்கம் விலை!
Gold silver rate 4 hrs
தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து எட்டாக்கனியாக மாறியுள்ள நிலையில், வெள்ளி விலையும் அதேபோல் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை சில காசுகள் மட்டுமே உயர்ந்துவந்த வெள்ளி விலை, தற்போது திடீரென கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.7 உயர்ந்து விற்பனையானது. இன்று மேலும் ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.187 என்ற உச்சத்தைக் தொட்டுள்ளது. இதனால் வெள்ளி விலை உயர்வு தொடரும் என்ற அச்சம் நிலவுகிறது.
அதேபோல் தங்க விலையும் குறைந்தபின் மீண்டும் உயர்வை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.85 உயர்ந்து ரூ.11,425க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.680 உயர்ந்து ரூ.91,400க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு இணையாக வெள்ளியும் கடுமையான போட்டியில் உள்ளது.
சமீபத்திய விலைக் குறிப்பு படி, வெள்ளிக்கிழமை காலை தங்கம் ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.90,080க்கு விற்பனையானது. ஆனால் அந்த குறைவு நீண்ட நேரம் நீடிக்காமல், மாலை நேரத்தில் மீண்டும் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720 ஆகியது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.11,340க்கு விற்பனையானது.
தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் சுமையுடன் நகை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். நிபுணர்கள், சர்வதேச சந்தை மாற்றங்களே இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் என தெரிவிக்கின்றனர்.