தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் அறிவிப்பு.! மதுரையில் மட்டும் அதிரடி மாற்றம்.!!
tn election time announcement
17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதுகுறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவிக்கையில், ''தமிழகத்தில் மார்ச், 19ல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 26 கடைசி நாள். மறுநாள் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்.
மனு வாபஸ் பெற மார்ச், 29 கடைசி நாள். வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை மே 23ல் நடக்கும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு, மக்களவை தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் வழக்கு நிலுவை காரணமாக, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நடைபெறாது'' என்று தெரிவித்து இரும்பித்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 18 அன்று, மதுரையில் சித்திரை திருவிழாவும் நடைபெறுகிறது. இதனால் சுமூகமாக தேர்தல் நடத்த முடியுமா., மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்த முடியுமா என கேள்வியெழுப்பியுள்ள தலைமை தேர்தல் அதிகாரி, அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை தள்ளி போட வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேண்டுமானால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைபெறும் நேரம் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுகிறது'' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேட்புமனுக்கள் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும் என்றும் விடுமுறை நாளான வரும் 23, 24 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
English Summary
tn election time announcement