நாளை மாநிலங்களவை எம்.பி.யாகும் கமல்ஹாசன்: இன்று பாராளுமன்ற வளாகத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!
Kamal Haasan photo with ministers at the Indian Parliament complex goes viral
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். தேர்தல் உடன்பாட்டின்படி, திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யாக அவர் நாளை பதவி ஏற்கவுள்ளார்.
இதற்காக இன்று அவர் டெல்லி சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, வில்சன் மற்றும் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். அது வெளியாகி, வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைப் பிரதிநிதித்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 06 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ஆம் தேதியுடன் முடிவடைஉள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Kamal Haasan photo with ministers at the Indian Parliament complex goes viral