பிரபல டி.வி. தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழையும் நடிகை 'காதல்' சந்தியா..!
Actress Kaathal Sandhya is making her debut on the small screen
'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சந்தியா. இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது. சந்தியாவுக்கு நல்ல அடையாளமாகவும் அமைந்தது. இந்த காதல் படத்தை தொடர்ந்து 'டிஷ்யூம்', 'வல்லவன்', 'கண்ணாமூச்சி ஏனடா', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
பின்னர் 2015-ஆம் ஆண்டில் சந்தியா, அர்ஜூன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2016-க்கு பிறகு படங்கள் நடிப்பதை நிறுத்திய சந்தியா கடைசியாக 'ருத்ரவதி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்பம், குழந்தை என கவனித்து வந்த சந்தியா தற்போது சின்னத்திரையில் வலம் வரவுள்ளார். பிரபல டி.வி. தொடர் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் சில வாரங்கள் தலைகாட்ட உள்ளதாகவும், ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து டி.வி. தொடரில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Actress Kaathal Sandhya is making her debut on the small screen