பிரிவினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி: முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களை சந்தித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட முக்கிய முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிய ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையிலான தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக இந்த  இடம்பெற்றுள்ளது.

அகில இந்திய இமாம் அமைப்பு ஏற்பாட்டில் டில்லியின் ஹரியானா பவனில் 3.5 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பை அதன் தலைவர் இமாம் உமர் அகமது இலியாசி ஒருங்கிணைத்தார். இதன் போது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இரு மதத் தலைவர்களும் தொடர்ச்சியாக சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 'ஆர்எஸ்எஸ் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என மோகன் பகவத் இந்த சந்திப்பில் உறுதியளித்தார். குறித்த சந்திப்பில் மோகன் பகவத்துடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் கிருஷ்ணா கோபால், மூத்த நிர்வாகிகள் ராம்லால் மற்றும் இந்த்ரேஷ்குமார் ஆகியோரும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு தொடர்பாக அகில இந்திய இமாம் அமைப்பு தலைவர் இமாம் உமர் அகமது இலியாசி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையும், அகில இந்திய இமாம் அமைப்பு 50 ஆண்டு விழா கொண்டாடும் போது, இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தன என்றும், இதன் ஒரு பகுதியாக மோகன் பகவத் மதரஸா சென்றது முதல் நடவடிக்கை என்றும்,  இதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பானது, பேச்சுவார்த்தையை இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினையை முடிவுக்கு கொண்டு வந்து நம்பிக்கையை வளர்க்கவும் இலியாசி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வழிவகுத்துள்ளதாகவும்  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த உரையாடல் ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதோடு, மதத்தலைவர்களின் வார்த்தைகளுக்கு மக்கள் கேட்பதால், கோவில்களில் அர்ச்சகர்கள் மற்றும் மசூதிகளில் இமாம்கள் மற்றும் குருகுலங்கள் மற்றும் மதரஸாக்களுக்கு இடையேயான தொடர்பை தொடங்குவோம் என உறுதியளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க உதவும் என்பதோடு, நாட்டின் நலனுக்காகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RSS chief Mohan Bhagwat meets Muslim clerics and scholars


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->