தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் தலைமை: சுதாகர் ரெட்டி பேட்டி..! - Seithipunal
Seithipunal


2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளது. அதனை ஒரு கட்டமாக தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது:  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. மேலும்  தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்து அதிகளவில் உள்ளது. 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று சட்டம் - ஒழுங்கை சரி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியின் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும்,அவரது தலைமையில்தான் 2026 தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி சந்திக்கிறது என்றும்  அறிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்துக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். அவரது எழுச்சி பயணத்துக்கு பிரதமர் மோடியின் ஆசியும், வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும், கட்சியில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudhakar Reddy says Edappadi Palaniswami is the leader of the AIADMK and BJP alliance in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->