முக்கியமாக பேச வேண்டும்... தனியாக அழைத்து... கள்ளக்காதலனை ஏவி கணவனை கொன்ற மனைவி!
UP Illegal affair case murder
உத்தரபிரதேசம் மீரட் மாவட்டம் அக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல், மனைவி அஞ்சலி, மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் அஞ்சலிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. ராகுல் இதை அறிந்து மனைவியை எச்சரித்தும், அஞ்சலி எதுவும் கவலைப்படாமல் அஜய்யுடன் தொடர்பைத் தொடர்ந்தார்.
கணவர் தடை செய்கிறார் என அஞ்சலி கூறியதால், இருவரும் சேர்ந்து ராகுலை கொலை செய்ய முடிவு செய்தனர். சம்பவத்தன்று அஜய், “முக்கியமாக பேச வேண்டும்” என கூறி ராகுலை கிராமத்தின் வயல்வெளிக்கு அழைத்தார். எதுவும் சந்தேகிக்காமல் ராகுல் அங்கு சென்றார். திடீரென அஜய் துப்பாக்கியால் மூன்று முறை சுட, ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அஜய் உடலை வயல்வெளியில் விட்டுவிட்டு தப்பினார். பின்னர் அஞ்சலி, “கணவரை யாரோ கொலை செய்துவிட்டார்கள்” என போலியாக புகார் அளித்தார். விசாரணையில் போலீசார் முதலில் கொள்ளை முயற்சி என சந்தேகித்தனர். ஆனால் அஞ்சலி திடீரென மாயமானதும், கிராமத்தினர் அவர் அஜய்யுடன் ஓடி விட்டதாகச் சொன்னதும் சந்தேகத்தை உறுதியாக்கியது.
அதன்பின் அஜய் கைது செய்யப்பட்டார். விசாரணையில், “அஞ்சலியுடன் கள்ளக்காதலால் ராகுலை சுட்டுக் கொன்றேன்” என அவர் ஒப்புக்கொண்டார். தற்போது இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
UP Illegal affair case murder