கம்போடியா உடனான மோதலால் பதற்றம் அதிகரிப்பு: தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்..! - Seithipunal
Seithipunal


கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாக மோதல் நிலைஉருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான மோதல் காரணமாக தாய்லாந்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 14 பேர் பொதுமக்கள் என்றும், ஒருவர் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பிற்காக தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில், சண்டை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தாய்லாந்தில் 08 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தாய்லாந்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய 08 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் இருக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற இருநாடுகளும் அறிவுறுத்தியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதற்கு முன்னதாக, கம்போடியாவுடனான பிரசிச்னை நுட்பமானது எனவும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்று தாய்லாந்தும், அமைதியாக இந்த பிரச்னையை தீர்க்கவே விரும்புவதாகவும் கம்போடியாவும் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thailand declares state of emergency amid tensions over conflict with Cambodia


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->