கார்கிலில் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Tribute brave soldiers who sacrificed their lives in Kargil Chief Minister MK Stalin
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு ''கார்கில் போர்'' ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை எல்லா ஆண்டும் ஜூலை 26-ந்தேதி கார்கில் போர் வெற்றி நாளாக இந்தியா கடைபிடித்து வருகிறது.

மேலும், இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அவ்வகையில், ஜூலை 26-ந்தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"கார்கிலில் தாய்நாட்டை பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tribute brave soldiers who sacrificed their lives in Kargil Chief Minister MK Stalin