ரூ.35 லட்சம் பொருட்கள் கருகியதால் அதிர்ச்சி! -திருப்பூர் பட்டாசு கடையில் தீ விபத்து - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையிலேயே படுத்து உறங்கினார்.

இன்று அதிகாலை கடையிலிருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதைப்  பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் கடையிலிருந்து வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து வேகமாக பரவிய தீ காரணமாக பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருக தொடங்கியது. மேலும் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இதில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார்.

மொத்தமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயில் எரிந்து சேதமான பட்டாசுகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire breaks out at Tiruppur cracker shop Shock as goods worth Rs 35 lakhs gutted


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->