அடேங்கப்பா! ஈரோடு ரெயில் நிலையத்தில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்!!! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள்,ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து செல்கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாகவும் வந்து செல்கின்றன.

இதில் அண்மைக்காலமாக வெளி மாநிலங்களிலிருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஈரோடு ரெயில்வே காவலர்கள் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கொல்கத்தாவிலிருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் அண்மைக்காலமாக ஈரோட்டிலுள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

இதுமாதிரியான ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் காவலர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், காவலரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.

அந்த நபரை விரட்டிப் பிடித்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது காவலர்களிடையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kilos ganja Cannabis seized Erode railway station What background


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->