ஒடிசாவில் அதிர்ச்சி: கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 15 சிறுமி கர்ப்பம்: உயிருடன் புதைக்க முயன்ற வாலிபர்கள்..!
Youths arrested for trying to bury 15 year old girl alive after she became pregnant after being gang raped in Odisha
ஒடிசாவில் 15 வயது சிறுமியை 03 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் ஜக்தீஸ்பூர் மாவட்டத்தில் பனஸ்பரா கிராமத்தைச் சேர்ந்த பாக்யதார்தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் என்ற சகோதரர்கள் மற்றும் துலு என்ற நபர் சேர்ந்து கடந்த சில மாதங்களாககுறித்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளனர்.
இதனால், அச்சிறுமி கர்ப்பம் அடைந்த துள்ளார். இதனையறிந்த 03 பேரும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளனர். அத்துடன், அதற்கு பணம் தரவும் தயாராகவும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அச்சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மூவரும் வரவழைத்துள்ளனர்.
-x5xuv.png)
அங்கு பள்ளம் ஒன்றை தோண்டி வைத்து, உடனடியாக கர்ப்பத்தை கலைக்க வேண்டும். இல்லையென்றால், பள்ளத்தில் போட்டு மூடிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பித்து தனது தந்தையிடம் வந்து நடந்ததை தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட தலைமை மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாக்கயதார் மற்றும் பஞ்சனன் ஆகியோரை கைது செய்ததுடன், தலைமறைவான துலு என்பவரை தேடி வருகின்றனர்.
English Summary
Youths arrested for trying to bury 15 year old girl alive after she became pregnant after being gang raped in Odisha