தொடர்ந்து பழச்சாறு.. உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு!
Student dies while attempting to lose weight by continuously drinking fruit juice
உடல் எடையை குறைக்க தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்த மாணவன் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உணவு பழக்கவழக்கத்தால் சிலரது உடல் எடையானது 150 கிலோ 120 கிலோ என அதிகரித்தது விடுகிறது.இதனால் பலர் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர்,சிலர் உணவு முறையை குறைத்து கொள்கின்றனர்,சிலர் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.அப்படி உடல் எடை குறையாமல் இருந்தால் மருத்துவமுறைகளை மேற்கொள்ளகின்றனர்.உடல் எடையை குறைக்க பலர் எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன.சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் மாணவர் ஒருவர் கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்தவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்..
கன்னியாகுமரி மாவட்டம் பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், இவருடைய மகன் சக்தீஷ்வர் பிளஸ்-2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.

ஆகையால் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Student dies while attempting to lose weight by continuously drinking fruit juice