''பாரதீய ஜனதாவை நம்பி வந்துள்ளேன். நம்பிக்கை வீண் போகாது; உரிய அங்கீகாரம் கிடைக்கும்'': முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி..!
Former MLA Vijayadharani says she is waiting with hope to get a post in BJP
கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தொடர்ந்து 03 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. சட்டசபையில் ஸ்டார் எம்.எல்.ஏ.வாக வலம் வளம் வந்தவர்.
அவருக்கு கட்சி பதவி வழங்குவதில் பல முறை அவமானங்களை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் காங்கிரசில் இருந்து விலகினார். அத்துடன், தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு பாரதீய ஜனதாவில் இணைந்து கொண்டார்.
-awusn.png)
அங்கும் அவருக்கு தகுந்த பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது குறித்து பா.ஜ.க. மேடையில் தனது ஆதங்கத்தை விஜயதரணி ஒரு முறை வெளிப்படுத்தியிருந்தார்.
பல வருடங்கள் ஆகியும் விஜயதரணிக்கு பதவி வழங்கப்டாதது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தி யில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக 03 முறை பதவி வகித்த விஜயதரணி பதவி யை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணிக்கு பதவிவழங்கப்படாதது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
-757ps.png)
இந்நிலையில் விஜயதரணி பாஜகவில் இருந்து விலகி த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து விஜயதரணி கூறியுள்ளதாவது:
தேசிய கட்சியான பாரதீய ஜனதாவை நம்பி வந்துள்ளேன். விரைவில் எனக்கு கட்சியில் உரிய அங்கீகாரத்தை பாரதீய ஜனதா வெளியிடும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யூகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், நம்பிக்கையோடு பாரதீய ஜனதாவின் அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். என் நம்பிக்கை வீண் போகாது என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும்,இதைத் தாண்டி மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Former MLA Vijayadharani says she is waiting with hope to get a post in BJP