சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக முதலவர் இன்று திறந்து வைக்கிறார்!  - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் ரூபாய் 137.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.

தென் மாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன்காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் சாலை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளது. 

மேலும் பெருங்களத்தூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தமிழக விழா நாட்களான தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே 55 கோடி மதிப்பில் உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி, பாலத்தின் பணிகள் தற்போது முடிந்துள்ளன. 

மேலும் பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மேம்பாலங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn cm open two bridge in chennai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->