வீண் திசைதிருப்பு வேலைகளில் ஈடுபடாமல் தோல்விக்குத் தயாராகுங்கள் CM ஸ்டாலின் - பாஜக பதிலடி!
tn bjp reply to dmk mk stalin lpg issue
தமிழநாடு பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தோல்வியைச் சந்திக்கத் தயாராகாத முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே!
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நமது பிரதமரின் ராஜதந்திரத்தால், ஈரான் அரசின் அனுமதியோடு, ஷிவாலிக், நந்தா தேவி, ஜக் வசந்த், பைன் காஸ் எனத் தொடர்ச்சியாகப் பல கப்பல்கள் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவிற்கான பல்லாயிரக்கணக்கான டன் மதிப்புள்ள எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும், நமது மத்திய அரசுடன் கொண்ட நட்புறவின் காரணமாக, கடந்த 3 மாதங்களில் 50,000 டன் எல்.பி.ஜியை இந்தியாவிற்கு அர்ஜென்டினா அனுப்பியுள்ளது. மேலும், போரைக் காரணம் காட்டி வளர்ந்த நாடுகளே டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்திய நிலையில், நமது பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசு மட்டும் விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளது. அதுமட்டுமல்ல, போர் தொடங்கியதிலிருந்து 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுக் கொண்டுவந்துள்ளது நமது மத்திய அரசு.
தாங்கள் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் காட்டிலும் 28% அதிகமாக உள்நாட்டில் எல்.பி.ஜி. உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 27 நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்ட நிலையில், நமது பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால் தான் சந்தை விரிவுபடுத்தப்பட்டு, 47-க்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து வாங்கப்படுகிறது. எனவே, இன்றல்ல, என்றோ நமது பாஜக தலைமையிலான மத்திய அரசு தயாராக உள்ளது.
எனவே, சட்டமன்றத் தேர்தல் தோல்வியை எதிர்கொள்ள பயந்து, இதுபோன்ற வீண் திசைதிருப்பு வேலைகளில் ஈடுபடாமல், தோல்விக்குத் தயாராகுங்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
tn bjp reply to dmk mk stalin lpg issue