''திமுகவினருக்கு துணிச்சல் கிடையாது ;ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் ஓடி ஒளியக் கூடாது''; அர்ஜுன் சம்பத் தாக்கு..! - Seithipunal
Seithipunal


''ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்; ஓடி ஒளியக் கூடாது. மு.க.ஸ்டாலின் கூட பயத்தால் தான் லண்டனுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறேன்'' என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது மேலும் கூறியதாவது: போதையை ஒழிக்க முதலில் மதுக்கடையை மூட வேண்டும் என்றும், திமுக, அதிமுகவினர் தான் சாராய ஆலைகளை நடத்துகின்றனர். தவெகவினர் சாராய ஆலைகள் நடத்தவில்லை. அதனால், விஜய்யால் மதுக்கடையை மூடிவிட முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, மதுக்கடையால் தான் அரசு நடத்த முடியும் என்ற மூடநம்பிக்கையை அரசியல்வாதிகள் விதைத்துள்ளனர். அது தவறானது என்று கூறியதோடு, லஞ்ச, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால், பணத்தை காப்பாற்ற தான் பிற கட்சியினர் தவெகவுக்கு செல்கின்றனர். விஜய் கொள்கை பிடித்துச் செல்லவில்லை. இதுபோன்ற விஷயத்தை விஜய் ஊக்குவிக்க கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கம்யூனிஸ்ட் தூண்டுதல் பேரில் ஆளுநர் மீது கடுமையான விமர்சனத்தை அமைச்சர் நிர்மல் குமார் வைத்துள்ளமை கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநர், மத்திய அரசுடன் மோதல் போக்கை உருவாக்க நினைக்கின்றனர். அதற்கு தவெக துணைபோகக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும், இந்துக்களை அவதூறாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்துகளையும், மோடியையும் அவதூறு பேசுவோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன், திமுகவை போன்று இல்லாமல் தவெகே அரசு, இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல், அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுப்பது ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டதோடு, உங்களது (தவெக) கட்சி சார்பில் உதவலாம். அரசு வேலை கொடுப்பது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது போன்றதாகிவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கரூர் சம்பவத்தில் நீங்கள் நிரபராதியாக இருங்கள்; உங்கள் மீது பழி சுமத்தியதாக கூட இருக்கட்டும். அதற்காக அரசுப் பணத்தை செலவழிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று, திமுகவினருக்கு துணிச்சல் கிடையாது என்றும், நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜி சரணடையலாம். சாலையை அமைக்காமல் ஊழல் செய்த எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், ஊழல் வழக்குகளில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் எனவும், ஓடி ஒளியக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் கூட பயத்தால் தான் லண்டனுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறதாகவும், மு.க.ஸ்டாலின் பேரன் லண்டனில் வெவ்வேறு மொழிகளில் படிக்கலாம். ஆனால், நாம் படிக்க கூடாது என்பார்கள் என்று அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arjun Sampath says former DMK ministers involved in corruption cases should not run away and hide


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->