மாநகராட்சி டெண்டரில் 'முதல்வர் படைப்பகம்' பெயரிலிருந்து 'முதல்வர்' சொல் நீக்கம்; சமூக வலைதளங்களில் விவாதம்..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் 'முதல்வர் படைப்பகம்' எனும் பெயரிலிருந்து 'முதல்வர்' என்ற சொல் நீக்கப்பட்டு, வெறும் 'படைப்பகம்' என மாற்றப்பட்டுள்ளமை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த படைப்பகங்களை, தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பதற்கான பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஆவணங்களில், இதுவரை 'முதல்வர் படைப்பகம்' என்று அழைக்கப்பட்டு வந்த இடங்கள், தற்போது 'படைப்பகம்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னையில் மொத்தம் 16 இடங்களில் இந்த படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நூலகம் மற்றும் அமைதியான சூழலை வழங்கும் இடமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக, அரசு கொண்டு வந்த 'நான் முதல்வன்' திட்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது 'முதல்வர் படைப்பகம்' பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டப் பெயர்களில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவது நிர்வாக ரீதியானதா அல்லது அரசியல் சார்ந்ததா என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை கூறி வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் முறையான விளக்கம் ஏதும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆனாலும், பெயர் மாற்றம் அரசு அலுவலகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The word MUTHALVAR has been removed from the name of the MUTHALVAR PADAIPAGAM department in the corporation tender


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->