அடுத்த தேர்தல் நாடகத்தை திமுக அரசு கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடானது - பாஜக கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி பல மாதங்களாக வெயிலிலும் குளிரிலும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு கைதுகளையும் அடக்குமுறைகளையும் மட்டுமே பரிசாக கொடுத்த திமுக அரசு, தற்போது தனது அடுத்த தேர்தல் நாடகத்தை கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடானது. 

தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசினப்படுத்தியதோடு நில்லாமல், “இலவச உணவளிக்கிறோம்” என்ற பெயரில் தரமில்லாத உணவுகளைக் கொடுத்தது மேலும் அவர்களை அவமானப்படுத்துவது எவ்வகையிலும் நியாயமல்ல. ஏழை எளிய மக்களுக்கும் சுயமரியாதை உண்டு என்பதை திமுகவினர் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 

எனவே, 'சமூகநீதியின் பாதுகாவலன்' என்று தன்னைத் தானே வெற்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அதை செயலிலும் காட்டிட வேண்டும்! நம் தெருக்கள் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்க கடினப்பட்டு உழைக்கும் நமது தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயில் அவர்களை விளம்பர பொருளாக பயன்படுத்த வேண்டாம் என்பதை தமிழக பாஜக சார்பாக எச்சரிக்கையாகவே விடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP DMK MK STalin govt


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->