ராகுல்காந்தியின் பொறுக்கிகள்... கடைந்தெடுத்த பொறுக்கிகளைக் கொண்ட கட்சி காங்கிரஸ் - தமிழக பாஜக கடும் விமர்சனம்!
tn bjp condemn to congress rahul
தமிழ்நாடு பாஜக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தலைநகர் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் AI உச்சிமாநாட்டில் கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகமின்றி, நமது நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் நோக்கில் மேலாடையை கழற்றி கையில் பிடித்துக் கொண்டு பொறுக்கித்தனம் செய்த காங்கிரசின் கைக்கூலிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களின் பேராதரவுடன் அரியணையில் அமர்ந்திருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை, அறத்தாலும், அறிவாலும், ஆற்றலாலும் வெற்றி கொள்ள முடியாத விரக்தியில், திரு. ரகுல்கந்திக்கும் அவரது அடியாட்களுக்கும் மூளை மழுங்கி பைத்தியம் முற்றிவிட்டது போல.
அதனால் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் எம்பிக்களை கொண்டு பாராளுமன்றத்திற்குள்ளேயே நமது மாண்புமிகு பிரதமர் மீது தாக்குதல் நடத்த முயன்ற தங்களது சதித்திட்டம் முறியடிக்கப்பட்ட ஆத்திரத்தில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஒரு மாநாட்டில் இன்று இப்படியொரு ஆபாச நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
இடம், பொருள், வெட்கம், மானம் இவற்றில் எதுவும் கடுகளவு கூட காங்கிரஸாருக்கு கிடையாது என்பதற்கு மற்றுமொரு சான்றான இந்நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஓர் அவமான அடையாளம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
tn bjp condemn to congress rahul