போர்க்கொடி தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி! கண்டிப்பா இனி நடக்கும் - சபாநாயகர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், "விருதாச்சலத்தில் ஐந்து வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பள்ளியின் உரிமையாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி மீது நகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்தை கொண்டு வரும்போது தமிழக சட்டப்பேரவையின் நேரலை நிறுத்தப்பட்டது .தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசும்போது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இது தொடர்ந்து வாடிக்கையாகவே நடந்து வருவதாக அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து வெளிநடப்பும் செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி, நான் சட்டப்பேரவையில் பேசும் போதெல்லாம் நேரலை நிறுத்தப்படுவதாகவும், சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல் திமுக உறுப்பினர் போல் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கேள்வி எழுப்பினர்.

அப்போது சபாநாயகர் அப்பாவு, நேரலை வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இனிவரும் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் அனைத்து கவனயீர்ப்பு தீர்மானங்களும் நேரலை செய்யப்படும் என்று அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Live issue ADMK MLA And EPS condemn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->