இந்தத் தீர்மானம் யாருடைய தனிப்பட்ட குழந்தையும் கிடையாது - பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் வினாக்கள் - விடை நேரத்துடன் முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக்கக் கோரும் சிறப்புத் தனித்தீர்மானத்தை அவையில் முன்மொழிந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

முதலமைச்சர் தாக்கல் செய்த இத்தனித்தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பேசுகையில், "நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாவதற்கு கருணாநிதியே பிள்ளையார் சுழி போட்டார்; அவரே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தார். 2006-ல் சட்டச் சொற்களஞ்சியம் முழுமையாக இல்லாத காரணத்தினாலேயே அத்தீர்மானம் ஏற்க மறுக்கப்பட்டது. சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் நேரடியாகக் குரல் எழுப்பியவர் மு.க.ஸ்டாலின்" என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், விவாதத்தைச் சுருக்கமாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய ரகுபதி, "மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்வது முக்கியம். சட்டச் சொற்களஞ்சியங்களைச் சரியாக உருவாக்கினால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரிக்காது. உண்மையில் இந்தத் தீர்மானம் எங்கள் குழந்தை, இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்" என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "வெறும் கோரிக்கைகளை விடுப்பது மட்டும் வரலாறாகி விடாது. எப்போது ஒரு திட்டம் செயல்வடிவம் பெற்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அதை யார் செய்கிறார்களோ அதுவே வரலாறாக மாறும். இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்திருக்கலாம்; எனவே இந்தத் தீர்மானம் யாருடைய தனிப்பட்ட குழந்தையும் கிடையாது" என்று பதிலடி கொடுத்தார்.

இவ்வாறாக, உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கும் அரசின் தனித்தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Debate Resolution Moved to Make Tamil Primary Language in High Court


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->