"சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்!": முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
TN Assembly Unanimously Passes Resolution to Make Tamil Official Language in Madras High Court CM Vijay Announces 3 Key Projects
வினாக்கள்-விடை நேரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய அமர்வின் தொடக்கத்தில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விதி 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழை முதன்மை மொழியாக்கும் தனித்தீர்மானம்
முதலமைச்சர் தாக்கல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடல் மொழியாக்கக் கோரி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் சிறப்புத் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து உரையாற்றினார்.
அனைத்துக் கட்சிகள் ஆதரவு: இத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருப்பினும், இத் தீர்மானத்தை வரவேற்பதாகத் திமுகவும், முழு ஆதரவு அளிப்பதாக அதிமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் அறிவித்தன.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முறைப்படி அறிவித்தார்.
English Summary
TN Assembly Unanimously Passes Resolution to Make Tamil Official Language in Madras High Court CM Vijay Announces 3 Key Projects