'காளி' குறும்படம் லீனா மணிமேகலை விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பரபரப்பு டிவிட்.! - Seithipunal
Seithipunal


சிகரெட் பிடிப்பது போன்ற சுவரொட்டியை வெளியிட்டு, இந்து கடவுள் காளி தேவி அவமதித்ததாக திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீது, வடமேற்கு டெல்லி, உத்தர பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில், 'காளி' சர்ச்சை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தனது டிவிட்டர் பக்கத்தில், லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகருத்த அக்கட்சியின் டிவிட்டர் பதிவில், 

"'காளி' குறித்த மொய்த்ராவின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். அந்த கருத்துக்கள் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை. அவை எந்த வகையிலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை. 

இது போன்ற கருத்துகளை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMC VS KAALI ISSUE LEENA MANIMEGALAI


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->