கூலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கூலி திரைப்படத்தை அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பு இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கூலி படத்தை இணையத்தில் முறைகேடாக வெளியிடுவதற்கான தடை கோருவது தொடர்பாக, படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணையின் போது தற்போது சட்டத்தை மீறி திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இணையதளங்களை முடக்குவதுடன், இனி வருங்காலத்தில் இதுபோன்ற இணையதளங்கள் ஏதேனும் வருமாயின் அவற்றையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய முறைகேடான நடவடிக்கைகள் தடுக்கப்படாவிட்டால் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc order no released coolie movie online


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->