தலைவர்களே! போர்க்களம் மூடப்படுமென்று... புதிய சூரியன் திறக்கப்படுமென்று...! - கவிஞர் வைரமுத்து - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அலாஸ்காவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும்  இந்த போர் ஒரு முடிவுக்கு வருமா என்று உலக நாடுகள் பல எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில், இரு தலைவர்கள் சந்திக்கின்றனர்.இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து:

அதில் அவர்,"
வாழப் பிறந்தோம்... இயற்கை வழியில்தான்...
சாகப் பிறந்தோம் போர் என்னும் செயற்கைச் சாவு ஒழிக...
டிரம்ப் புதின் சந்திப்பினால் ரஷ்ய உக்ரைன் போர் முடிவுக்கு வருக...
தரையில் சிந்திய ரத்தம் உலர்க...
உக்ரைனின் புகையடித்த மரங்களில் பூக்கள் மலர்க...
வெள்ளை வெள்ளையாய்க்காணும் கொள்ளைக் குழந்தைகள் பள்ளி செல்க....
உலகத் தலைவர்களே!
உலகம் எதிர்பார்க்கிறது போர்க்களங்கள் மூடப்படுமென்று...
புதிய சூரியன்திறக்கப்படுமென்று...
பாவேந்தரே சொல்லய்யா
"கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.இதற்கு nettizen -கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Leaders May battlefield be closed May new sun be opened Poet Vairamuthu


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->