கர்நாடகத்தில் ரூ.39,577 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!
karnataka GST Scam
மத்திய நிதியமைச்சகம் தெரிவித்ததாவது, கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு 2025 நிதியாண்டில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
2024-25 நிதியாண்டில் மட்டும், ரூ. 39,577 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி ஏய்ப்பை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து மொத்தம் 1,254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த அதிகரிப்பு கவலைக்குரியது. 2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு நடந்தது; அப்போது 925 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
அதற்கு முந்தைய 2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புள்ளிவிவரங்களை மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.