அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் ராணா டகுபதி...! சட்டவிரோத சூதாட்ட செயலியில் நடித்ததற்காக...!
Actor Rana dagubadhi appears Enforcement Directorate office for acting in an illegal gambling app
ஆன்லை app -கள் பலவிதமான மோசடி நிகழ்கிறது. இதில் ஆன்லைனில் சட்டவிரோத பணப் பரிமாற்றம், பல்வேறு சூதாட்ட செயலிகள் மூலம் நடந்திருப்பதாக பல புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது.

இதில் பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, முற்றிலுமாக 29 நடிகர்- நடிகைகள் மீது புகார் எழுந்தததால் அமலாக்கத்துறை அவர்களை எல்லாம் விசாரணை செய்து வருகிறது.
இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ''ராணா டகுபதி'' மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கடந்த 23-ந்தேதி நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் அதன்படி நடிகர் ராணா அன்றைய தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராவதை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் ஆகஸ்டு 11- ம் தேதி அதாவது இன்று ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.அவ்வகையில், ராணா இன்று ஐதராபத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சூதாட்ட செயலி வழக்கு குறித்து பலகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Actor Rana dagubadhi appears Enforcement Directorate office for acting in an illegal gambling app