தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பதவி உயர்வு...!
Four IPS officers transferred in Tamil Nadu
தமிழகத்தில் பணியாற்றி வரும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,
டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன், திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

English Summary
Four IPS officers transferred in Tamil Nadu