மஹாராஷ்டிராவில் கோர விபத்து: கோவிலுக்கு சென்ற சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 08 பெண்கள் பலி; 25 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாப்பல்வாடி கிராமத்தை சேர்ந்த 35 பேர், க்ஷேத்ரா மகாதேவ் குண்டேஷ்வர் கோயிலுக்கு சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது திடீரென அவர்களின் சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் சாலையிலிருந்து விலகி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் சென்ற பலர் உடல் நசுங்கியுள்ளனர். இந்த விபத்தை பார்த்த உள்ளூர் வாசிகள் வனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு 10 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் குறித்து பிம்ப்ரி சின்ச்வாட் போலீஸ் அதிகாரி வினோய் குமார் சவுபே கூறியதாவது: 

பக்தர்கள் 35 பேருடன் சென்ற சரக்கு வாகனம், இன்று அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 35 பயணிகள் இருந்துள்ளனர். விபத்தில் 08 பெண்கள் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிவிட்டுள்ளதாவது: 'விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.'என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

08 women killed and 25 injured as goods vehicle falls into gorge in Maharashtra


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->