திருவள்ளுவருக்கு காவி உடை.! தமிழக பள்ளிக்கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு.!
THIRUVALLUVAR kaavi dress issue
கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக, இன்று பள்ளிகல்வித்துறை ஆலோசனை செய்ய உள்ளது.
உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு பாடத்தில், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை காவி உடையில் காண்பிக்கப்பட்டது.

இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக இன்று பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
THIRUVALLUVAR kaavi dress issue