தமிழக அரசு துறைகளில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in government departments
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குனர் உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான விவரங்களைக் காண்போம்.
விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி:- மே 13.
விண்ணப்பிக்க கடைசி நாள்:- ஜூன் 11.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கணினி வழித்து தேர்வு.
இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வர்களின் தரவரிசையை தீர்மானிக்கும் என்றும், தேர்வர்களின் நலன் கருதி முதல் முறையாக பாடத்திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
English Summary
job vacancy in government departments